tamilnadu

img

இண்டிகோ நிறுவனம் 6 புதிய விமானங்களை இயக்க திட்டம்!

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வரும் ஜூலை 20-ஆம் தேதியில் இருந்து 6 புதிய விமானங்களை, தினமும் உள்நாட்டில் இயக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் நிதி நெருக்கடியால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமான சேவை முழுவதும் நிறுத்தியது. அதில் இருந்து, விமான நிறுவனங்களும் பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியும், சலுகைகளை அறிமுகப்படுத்தியும், ஜெட் ஏர்வேஸ் விமான பயணிகளை தன் பக்கம் ஈர்க்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் வரும் ஜீவ 20-ஆம் தேதியில் இருந்து 6 புதிய விமானங்களை உள்நாட்டில் இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த புதிய உள் நாட்டு சேவை, ஷில்லாங்-கொல்கத்தா மற்றும் ரெய்ப்பூர்-கொல்கத்தா ஆகிய இடங்களில் தினசரி விமானங்களாக இயக்கப்படும். இதோடு கொல்கத்தா-ஷில்லாங்-கொல்கத்தா ரூட்களில் இண்டிகோவின் அடுத்த பிராந்திய இணைப்புத் திட்டமாக (Regional Connectivity Scheme) இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. 

மேலும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இண்டிகோ விமான நிறுவனம், ரூ.999 என்ற திட்டத்தினை அனைத்து ரூட்டுக்கும் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் படி வரும் 29-ஆம் தேதி முதல் குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என ஏற்கனவே இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


;